கூட்டுறவு துறையில் சிபில் ஸ்கோர் முறையை ரத்து செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: கூட்டுறவுத் துறையில் சிபில் ஸ்கோர் அமலாக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் மாசிலமணி வெளியிட்ட அறிக்கை: இனி கூட்டுறவு கடன் பெறுவோர்களின் சிபில் ஸ்கோர் மதிப்பெண் பார்த்து தகுதி உள்ளோருக்கு மட்டும் கடன் வழங்கிட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. விவசாயிகள் பெரும் கஷ்டப்பட்டு, பல மாதங்கள் காத்திருந்துதான் போட்ட முதலீட்டை திருப்பி எடுக்க முடியும்.இப்படியான நிலையில், சிபில் ஸ்கோர் தகுதியை அளவீடாக கொண்டு விவசாயிகள் கடனை தீர்மானிக்க கூடாது. கடன் பெற்றோர் அக்கடனை திருப்பி செலுத்திய முறைகளை கணக்கீடாக கொண்ட சிபில் ஸ்கோர் மதிப்பெண்களின் அளவீடு தான், விவசாயிகள் கடன் பெறுவதற்கான தகுதியாக கொண்டு தீர்மானிக்கப்படும் என்றால் பெரும்பகுதி விவசாயிகளுக்கு கடனே கிடைக்காது. எனவே முதல்வர் தலையிட்டு வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் ஸ்கோர் முறையை கைவிட நடவடிக்கை எடுத்திட கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post கூட்டுறவு துறையில் சிபில் ஸ்கோர் முறையை ரத்து செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: