இது தவிர வட மேற்கு திசையில் இருந்து வரும் காற்றும் தென்மேற்கு பருவக்காற்றும் இணையும் நிகழ்வு ஏற்பட்டதால், தமிழகத்தில் வட மாவட்டங்களில் நேற்று மாலையில் மழை பெய்யத் தொடங்கியது. இ ந்த மழை இரவு வரை நீடித்தது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மழை பெய்தது. மேலும், வேலூர், திருப்பத்தூர் ,ராணிப்பேட்டை, அரியலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்தது.
இந்நிலையில் தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் இன்றும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 11ம் தேதியில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
12ம் தேதியில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதே நிலை 14ம் தேதி வரை நீடிக்கும் வாய்ப்புள்ளதால் மேற்கண்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. சென்னையில் 100 டிகிரி வெயில் நிலவும். பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
The post தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் appeared first on Dinakaran.