மதுரை: மதுரை மாவட்டம், எழுமலையைச் சேர்ந்த ரவிக்குமார், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் 27 கோயில்களில் ரூ.80 கோடி செலவில் திருமண மண்டபம் கட்டடப்படும் என கடந்த 2022-ல் சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி பழநி முருகன் கோயிலின் உப கோயிலான கள்ளிமந்தையம் வரதராஜ பொருமாள் கோயிலுக்கு சொந்தமான காலியிடத்தில் ரூ.6.30 கோடியில் திருமணம் மண்டபம் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே, இதுதொடர்பாக தமிழக அரசு 16.05.2025ல் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியாகிளெட் ஆகியோர், கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
The post கோயில் நிதியில் திருமண மண்டபம் அரசாணைக்கு ஐகோர்ட் தடை appeared first on Dinakaran.