ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் நாகநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் அகோரமூர்த்தி மகன் தியாகராஜன்(45). இவர் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அதே பகுதியில் உள்ள கோயிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், உழவாரப்பணிக்கு வந்தபோது, அர்ச்சகர் தியாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக, 24 வயது இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் ஆம்பூர் அனைத்து மகளீர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும், தலைமறைவான தியாகராஜனை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு புதுச்சேரியில் பதுங்கி இருந்த அர்ச்சகர் தியாகராஜனை போலீசார் கைது செய்தனர்.
The post உழவாரப்பணியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அர்ச்சகர் கைது appeared first on Dinakaran.