நெல்லை மாவட்டம் அருகன்குளம் பகுதியில் முத்து என்பவருக்கு சொந்தமான பழைய குடோன் உள்ளது. இந்த குடோனில் பழைய மர சாமான்கள் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் 3.30 மணிக்கு பிறகு மின்கசிவு காரணமாக குடோனில் மர பொருட்களில் லேசான தீ விபத்து ஏற்பட்டது.
பின்னர் தீ அதிகளவில் பரவி அங்குள்ள மர சாமான்கள் பற்றி எரிந்தது. தீ காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் 6 வண்டிகளில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நிற போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குடோனில் இருந்த அனைத்து பொருட்களின் தீயில் கருகி நாசமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவினால் தான் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் காவல்துறையின் விசாரித்து வருகின்றனர்.
The post நெல்லை அருகே மரப்பொருட்கள் குடோனில் தீ விபத்து; பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.