காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பால் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அமைக்கப்பட்டது, இக்குழு இதுவரை 7 முறை கூடியுள்ளது. இக்கூட்டுக்குழு பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு நேரில் சென்று கருத்து கேட்பு நடத்தியுள்ளது, மற்ற மாநிலங்களுக்கு இன்னும் செல்லவில்லை. கூட்டுக்குழுவின் கால அவகாசம் மழைக்கால கூட்டத் தொடர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, அதனை மேலும் நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. கூட்டுக் குழுவின் தலைவரும், பாஜக எம்பி-யுமான பி.பி.சவுத்ரி 2034-ல் நாடுமுழுதும் ஒரே தேர்தல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். கூட்டுக்குழு தலைவரின் தன்னிச்சையான இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
The post ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் 2034ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் : நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் அறிவிப்பால் சர்ச்சை!! appeared first on Dinakaran.