குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட சோலடாமட்டம் கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
அப்பகுதியினர், அன்றாட அலுவல்,பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல 3 கி.மீ., தூரமுள்ள வண்டிச்சோலை பகுதிக்கு சென்று,அங்கிருந்து பேருந்து மூலம் குன்னூர், ஊட்டி, கோத்தகிரிக்கு சென்று வருகின்றனர்.குறிப்பாக கோடமலை எஸ்டேட் – வண்டிச்சோலை வரையுள்ள பாதை, வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், சாலை அமைக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதில் தமிழக அரசு தலைமை கொறடா ராமசந்திரன், திமுக மாவட்ட பொருப்பாளர் கே.எம்.ராஜு ஆகியோர் கலந்து கொண்டு, சாலை பணியை பூமி பூஜை செய்து, துவக்கி வைத்தனர். அப்பகுதி மக்களின் அடிப்படை வசதியான சமுதாய கூடம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, திறந்து வைத்தார்.
மாவட்ட திமுக தொழிலாளர் அணி சார்பாக அப்பகுதியில் வசிக்கும் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு,சப்.கலெக்டர் சங்கீதா,தாசில்தார் ஜவஹர், மாவட்ட துணை செயலாளர்கள் லட்சுமி, ரவிக்குமார், ஒன்றிய செயலாளர் பிரேம்குமார்,குன்னூர் நகர செயலாளர் ராமசாமி,
மாநில விளையாட்டு அணி மேம்பாட்டு செயலாளர் வாசிம் ராஜா,பொதுக்குழு உறுப்பினர் செல்வம்,காளிதாஸ்,குன்னூர் முன்னால் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுனிதா,மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜெயக்குமார்,முன்னாள் மாவட்ட முன்னாள் ஊராட்சி உறுப்பினர் மீனா ஆனந்தராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கருணாநிதி,பாலசுப்ரமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பத்மநாபன், வினோத்குமார் என பலர் கலந்து கொண்டனர்.
The post குன்னூர் அருகே புதிய சாலைக்கு பூமி பூஜை சமுதாய நலக் கூடம் திறப்பு appeared first on Dinakaran.