நாமக்கல்லில் மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: நாமக்கல்லில் மூதாட்டி சாமியாத்தாள் கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மர்மக் கொள்ளையர்களால் மூதாட்டி சாமியாத்தாள் கொலை செய்யப்பட்ட செய்தியால் அதிர்ச்சி ஏற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

மறைந்த சாமியாத்தாள் குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்

சாமியாத்தாள் வெட்டப்பட்டு, கோவை KMCH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் அதற்குள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார் என்பது மிகவும் வேதனைக்குரியது .

பல்லடம், சிவகிரி வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மட்டுமே இந்த குற்றங்களை செய்தவர்களா? என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்கனவே உள்ள நிலையில், இச்சம்பவம் அச்சந்தேகத்தை வலுப்பெறவே செய்துள்ளது.

சித்தம்பூண்டி சாமியாத்தாள் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

The post நாமக்கல்லில் மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: