சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுமியின் குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர், சிறுமியை அருகில் உள்ள சிறிய கிளினிக்குக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்த மருத்துவர் சிறுமியை உடனடியாக பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். இதையடுத்து, சாஸ்திரி பூங்காவில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்றனர். அங்கு அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும், சிறுமியின் உடலில் இருக்கும் காயங்களை பார்க்கிறபோது, சிறுமி பாலியல் வன்கொடுமை ஆளாகி இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். குற்றவியல் மற்றும் தடய அறிவியல் ஆய்வக குழுக்கள் வரவழைத்து, ஆதாரங்களை சேகரித்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளோம். முன்னுரிமை அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. குற்றவாளியை கைது செய்யப்ப பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன,’ என்றனர்.
The post டெல்லியில் சிறுமியை கொன்று சூட்கேசில் அடைத்த கொடூரம்; பலாத்காரம் செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.