நல்லிணக்கம் வேண்டி போப் பிரார்த்தனை

வாடிகன் சிட்டி: போப் 14ம் லியோ வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று நடந்த திருப்பலியில் உரையாற்றிய போது, ‘‘அன்பு இருக்கும் இடத்தில் பாரபட்சம் இருப்பதில்லை, பாதுகாப்பு தேடுவதில்லை. அண்டை வீட்டாருடன் நம்மை பிரிக்கும் சூழல்கள் இருப்பதில்லை, துரதிஷ்டவசமாக இப்போது அரசியல் நெருக்கடிகள் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம்.

இந்த சமயத்தில் நல்லிணக்கத்திற்காகவும், பேச்சுவார்த்தைகளுக்காகவும் பிரார்த்தனை செய்வோம். தடைகளை உடைத்து, அலட்சியம், வெறுப்பின் சுவர்களை இடித்து தள்ளுங்கள். முதலில் நம் இதயங்களில் அமைதி நிலவ வேண்டும். அமைதியான இதயம் மட்டுமே குடும்பத்திலும், சமூகத்திலும் சர்வதேச உறவுகளிலும் அமைதியை பரப்ப முடியும்’’ என்றார்.

 

The post நல்லிணக்கம் வேண்டி போப் பிரார்த்தனை appeared first on Dinakaran.

Related Stories: