தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வுக்கால பயன்கள் வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை : அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியாற்றி ஓய்வு பெறும் போது கடைசி பணி நாளில்அவர் களுக்கு உரிய ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், 2024-25ம் கல்வியாண்டில் ஓய்வுபெற்ற தொடக்கக்கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்களில் 1000 பேருக்கு இன்னும் ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை.

30 ஆண்டுகளுக்கு மேல் அரசு பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வுக்காலப் பயன்களை வழங்க வேண்டியது அரசின் முதல் கடமை, ஆசிரியர்களின் மன உளைச்சல் மற்றும் வேதனைகளுக்கும் அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். தணிக்கைத் துறையால் போடப்பட்டுள்ள தேவையற்ற தடைகள் அனைத்தையும் அகற்றி, ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் அரசு உடனே வழங்க வேண்டும்.

 

The post தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வுக்கால பயன்கள் வழங்க ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: