இதையடுத்து, விவசாயிகள் பலர் தங்கள் விளைநிலங்களில் மானாவாரி பயிர் மற்றும் காய்கறி சாகுபடியை அதிகரிக்க செய்ய துவங்கியுள்ளனர். இதில் அதிகபடியாக நிலக்கடலை மற்றும் மக்காசோளம் விதைப்பு பணியை மேற்கொள்கின்றனர். சுற்று வட்டாரத்தில் கோவிந்தனூர், சமத்தூர், பொன்னாபுரம், வடக்கிபாளையம், சூலக்கல், ராசக்காபாளையம், கோமங்கலம்புதூர், முத்தூர், நல்லிகவுண்டன்பாளையம், கோட்டூர் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் மானாவாரி பயிர்களை பயிரிட தங்கள் விளை நிலங்களில் ஏர் உழுது சீர்படுத்தியுள்ளனர். தற்போது பெய்யும் பருவமழையால், சாகுபடி செய்யப்படும் பயிர்கள் தளைக்க ஏதுவாக இருக்கும் என்று விவசாயிகள் பலர் கருத்து தெரிவித்தனர்.
The post பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் மானாவாரி, காய்கறி சாகுபடியை அதிகரிக்க தயாராகும் விவசாயிகள் appeared first on Dinakaran.