கறம்பக்குடி அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம், பிலா விடுதி விடுதி ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, பிலா விடுதி, அம்மானிப்பட்டு, வெள்ளாள கொள்ளை, கூத்தம்பட்டி, பட்டமா விடுதி, மானிய வயல், செவ்வாய்பட்டி போன்ற பல்வேறு கிராமங்கள் உள்ளன. குறிப்பாக பிலாவிடுதி ஊராட்சியில் மேலத்தெரு கிராமம் பகுதியில் ஜல்லிகள் பெயர்ந்தும், குண்டும் குழியுமாக சைக்கிள் செல்லமுடியாத அளவிற்கு தார்சாலை பழுதடைந்துள்ளது.

சாலையை சீரமைக்க கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தலையிட்டு பழுதடைந்து போக்குவரத்திற்கே லாயக்கற்ற நிலையில் உள்ள தார் சாலையை சீரமைத்து பொதுமக்களின் நலன் கருதி சீரமைக்க வேண்டும் என திராவிடதி ஊராட்சி, மேலத்தெரு பகுதி மக்கள் அரசுக்கு ஒன்றிய நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.

The post கறம்பக்குடி அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: