ஓரணியில் நின்று வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு: உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளம் பதிவில் கூறியிருப்பதாவது: திமுகவின் வலிமையை மென்மேலும் கூட்டிட ”ஓரணியில் தமிழ்நாடு” என்ற உறுப்பினர் சேர்ப்பு திட்டத்தை உடன்பிறப்புகள் வீடு, வீடாகச் சென்று மேற்கொள்ள வேண்டும் என மதுரை பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார் திமுக தலைவர்-முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனைச் சிறந்த முறையில் செயல்படுத்த திமுக தலைவர் தலைமையில் இன்று (நேற்று) நடைபெற்ற, மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம். திமுக இளைஞர் அணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை எடுத்துக்கூறி, ”ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கைக்கும் இளைஞர் அணி தனது முழு ஒத்துழைப்பை வழங்கிடும் எனவும் உரையாற்றினோம். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை தொடர, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 விழுக்காடுகளுக்கும் அதிகமான வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக இணைக்க உறுதியேற்போம்! ஓரணியில் நின்று ”வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு!” இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post ஓரணியில் நின்று வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு: உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: