குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு:
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, வெளிநாடுகளில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், இந்தியர்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்தப் பண்டிகை தியாகம், நம்பிக்கை மற்றும் மனிதாபிமான விழுமியங்களின் சின்னமாக கருதப்படுகிறது. இது சமூகத்தில் ஒற்றுமை, அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியைப் மக்களிடையே பரப்புகிறது. நமது வாழ்வில் தன்னலமற்ற மனப்பான்மை, அர்ப்பணிப்பு ஆகிய மாண்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் சிறந்த சமூகத்தை உருவாக்க நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வாழ்த்து செய்தி:
பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள். இந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொடுக்கட்டும். நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தட்டும் என்று மோடி பதிவிட்டுள்ளார்.
The post பக்ரீத் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து..!! appeared first on Dinakaran.