கலெக்டர் தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ஊட்டியில் நடந்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார்.

இதில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நகராட்சி,பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள்,நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் உள்ளிட்டவற்றின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழக அரசு மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு அறிவிக்கப்பட்டு பல்வேறு பணிகளை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் முறையாக கண்காணித்து விரைந்து மேற்கொண்டு முடிக்க வேண்டும். பணிகளை தரமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் நிலவும் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தினார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடுதல் ஆட்சியர் கௌசிக், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு,முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண்,குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கலெக்டர் தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: