திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பூஜ்ஜிரெட்டிபள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி ராஜேந்திரன்(69) வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து ராஜேந்திரன் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பரிசோதனைக்குப் பின் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது திடீரென அது ராஜேந்திரனின் உடல் இல்லை என உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் ராஜேந்திரனின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட உடல், பீஹாரை சேர்ந்த ஒரு இளைஞரின் உடல் என்பது தெரிய வந்ததையடுத்து அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் பீஹாரை சேர்ந்த ஒரு இளைஞரின் சடலத்திற்குப் பதில் ராஜேந்திரனின் சடலம் பீஹாருக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாற்றி அனுப்பப்பட்ட ராஜேந்திரனின் கொண்டு வர ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அலட்சியமாக செயல்பட்ட டாக்டர் கிருஷ்ணாவை திருவண்ணாமலைக்கு பணியிட மாற்றம் செய்து, மருத்துவ கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
The post திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர் சடலம் பீஹாருக்கு அனுப்பப்பட்ட விவகாரத்தில் மருத்துவர் பணியிட மாற்றம்! appeared first on Dinakaran.