இலங்கை பறிமுதல் செய்த 34 விசைப்படகுகளையும் கடலில் மூழ்கடிக்க முடிவு: தமிழக மீனவர்கள் கொந்தளிப்பு


ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கடந்த 5 ஆண்டுகளில் 184 தமிழக படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 74 படகுகள் அந்நாட்டு நீதிமன்றங்களினால் நாட்டுடமையாக்கப்பட்டு உள்ளன. இந்த படகுகள் தலைமன்னார், காங்கேசன் துறை, காரைநகர், கராஞ்சி, மயிலிட்டி, கல்பிட்டி ஆகிய மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த மீன்பிடி இறங்குதளங்களில் தமிழக மீனவர்களின் படகுகள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டுள்ளதால், தங்கள் படகுகளை நிறுத்த இடமில்லாமல் சிரமப்படுவதாக இலங்கை மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தமிழக படகுகளால், கடற்கரை மாசடைவதாகவும் தெரிவித்தனர். கடல் நீரும், மழை நீரும் உட்புகுந்து சேதமடைந்ததால், இனிமேல் பயன்படுத்தவே முடியாது என்ற நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் 34 விசைப்படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க அந்நாட்டு மீன்வளத்துறை முடிவு செய்துள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகளை கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கை, தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

The post இலங்கை பறிமுதல் செய்த 34 விசைப்படகுகளையும் கடலில் மூழ்கடிக்க முடிவு: தமிழக மீனவர்கள் கொந்தளிப்பு appeared first on Dinakaran.

Related Stories: