சென்னை: காயிதே மில்லத் 130வது பிறந்த நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: எவரும் குறைகாண முடியாத அப்பழுக்கற்ற வாழ்க்கைக்கு சொந்தக்காரர்- இஸ்லாமிய சமூகத்தின் இணையற்ற தலைவர் – தந்தை பெரியாரால் அரிய தலைவர் எனப் போற்றப்பட்டவர் – கலைஞரின் மீது அன்பைப் பொழிந்தவர் – 1967ல் கழகம் ஆட்சியமைக்கத் துணைநின்றவர் – நாட்டுப்பற்றிலும் மொழிப்பற்றிலும் எக்கு போன்ற உறுதியைக் காட்டிய கண்ணியத்தென்றல் காயிதே மில்லத் பிறந்த நாள்! அவர் பிறந்த திருநெல்வேலி மாவட்டத்தில் அமையவுள்ள மாபெரும் நூலகத்திற்கு அவரின் பெயர் சூட்டப்படும் என அறிவித்த மனநிறைவோடு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன்.
The post 130வது பிறந்த நாள் காயிதே மில்லத்துக்கு மரியாதை: முதல்வர் நெகிழ்ச்சி பதிவு appeared first on Dinakaran.