டெல்லி : 2030ம் ஆண்டுக்குள் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் 1,000 வாகனங்களை இயக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மின்சார வாகனங்களை தொடர்ந்து பெட்ரோல், டீசல் வாகனத்துக்கு மாற்றாக ஹைட்ரஜன் வாகனங்களை கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டுக்குள் 50 ஹைட்ரஜன் பேருந்துகளை இயக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.