மேலும் வெளியே ரசிகர்கள் உயிரிழந்த நிலையில், மைதானத்திற்குள் ஆர்.சி.பி அணி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தல 10 லட்சம் வழங்க ஆர்.சி.பி. அணி நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. இது தொடர்பாக அறிவிப்பை ஒன்றை வெளியிட்ட ஆர்.சி.பி. அணி; பெங்களூரில் நேற்று நடைபெற்ற துரதிர்ஷ்ட சம்பவம் எங்களுக்கு மிகப்பெரிய வலியையும் கவலையையும் கொடுத்திருக்கிறது. ஆர்சிபி ரசிகர்களுடன் நாங்கள் எப்போதும் துணை நிற்போம். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்கும் விதமாகவும் 11 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முடிவெடுத்து இருக்கிறோம்.
The post பெங்களூருவில் கூட்டநெரிசலில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: ஆர்சிபி அறிவிப்பு appeared first on Dinakaran.