தென்காசி: இடைகால் அருகே வயல்வெளிக்குள் அரசு பேருந்து புகுந்த விபத்தில் ஜெயலட்சுமி என்பவர் உயிரிழந்தார். ஆலங்குளத்தில் இருந்து பாபநாசம் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள் பேருந்து புகுந்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.