சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி இன்சூரன்ஸ் நிறுவன பணியாளர் இறந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் பிரகாஷ் ராஜ் நேற்று முன்தினம் இரவு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சென்னை தலைமை அலுவலகத்தில் பயிற்சிக்காக வந்தபோது மின்சாரம் தாக்கி பிரகாஷ்ராஜ் (35) பரிதாபமாக உயிரிழந்தார்.