இந்நிலையில், வெள்ளிக்கிழமை பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை என்று பரப்பப்படும் தகவல் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் அதிகாரபூர்வ வலைத்தளப் பக்கத்தில் கூறியதாவது; இது முற்றிலும் வதந்தி. பரவி வரும் இணையதள செய்தி செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதாகும். இது போன்ற எந்த அறிவிப்பையும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையும் வெள்ளிக்கிழமை (06.06.2025) அன்று பள்ளிகளும் செயல்படும் என்று தெரிவித்துள்ளது.
The post பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என்பது வதந்தி: தகவல் சரிபார்ப்பகம் தகவல் appeared first on Dinakaran.