கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,090-க்கும் பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,720-க்கும் விற்பனையாகிறது. இந்தத் திடீர் தங்கம் விலை உயர்வுக்கு, சர்வதேச அளவில் தங்கம் விலையில் சற்று ஏற்றம் கண்டுள்ளது முக்கிய காரணமாகும் என்றும், டாலரின் மதிப்பு இறக்கத்தில் சென்று கொண்டிருப்பது ஒரு காரணம் என்றும் தங்கம் நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,320 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதுவும் ஒரு கிராமின் விலை ரூ.9 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
The post 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1320 அதிகரிப்பு ரூ.73 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை appeared first on Dinakaran.