இப்படி முக்கிய பண்டிகை மட்டுமல்லாது வார விடுமுறை நாட்களில் கூட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் தனியார் பேருந்துகளுக்கு நிகராக எஸ்இடிசி பேருந்துகளில் அனைத்து வசதிகளும் தற்போது உள்ளது. மேலும் உடனுக்கு உடன் முன்பதிவும் செய்ய முடிகிறது. இதனால் பொதுமக்கன் அரசு பேருந்துகளை விரும்பி பயணம் மேற்கொள்கிறார்கள். 2025ம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 496 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதத்தில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 632 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முன்பதிவு தற்போது அதிகரித்துள்ளது.
The post அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு புதிய உச்சம் மே மாதம் 7.74 லட்சம் பயணிகள் முன்பதிவு appeared first on Dinakaran.