இதையடுத்து, இந்த வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் சார்பில் தாக்கல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட கட்டுமான பணிகள் 25 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டு 60 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. தங்களுடைய பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் முடிவடைய இருந்த நிலையில் 2025-28 புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வேலைகள் தொடங்கப்பட்டால் சங்க நிர்வாகத்தின் கட்டிட பணிகள் பாதிக்கப்படும். எனவேதான், பொதுக்குழு, செயற்குழுவில் தற்போதைய நிர்வாகிகளுடைய பதவி காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜனநாயக அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றி முடிவெடுக்க பொதுக்குழுவிற்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளது. பதவி கால நீட்டிப்பில் எந்தவித விதி மீறலும் இல்லை. விதிகளுக்கு உட்பட்டு நடந்த பொதுக்குழு தீர்மானத்தில் 300 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அதற்கான ஆவணம் பதிவுத்துறை பதிவாளரிடம் தாக்கல் செய்யபட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, இருதரப்பினரின் விரிவான வாதத்திற்காக வழக்கை 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post தேர்தல் நடந்தால் கட்டிட பணி பாதிக்கப்படும் நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் நீட்டிப்பு ஏன்? உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தகவல் appeared first on Dinakaran.