வாகன சோதனையில் 1 டன் ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்

சேந்தமங்கலம், ஜூன் 5: சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் தலைமையில் எஸ்ஐ தமிழ்குமரன், எஸ்எஸ்ஐ செல்வம் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலையில், சேந்தமங்கலம் அடுத்த புதன்சந்தை களங்காணி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தையை நோக்கி வந்த ஆம்னி வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்திய போலீசார், சோதனையிட்டனர். அதில் 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டது, சேந்தமங்கலம் அடுத்த பெருமாபாளையம் காலனியை சேர்ந்த ராஜேஷ்(26) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அரிசி மூட்டைகளுடன், காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாகன சோதனையில் 1 டன் ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: