ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மொத்தம் சேர்க்கப்பட்ட 67 சாட்சிகளில் 51 பேரிடம் விசாரணை முடிவடைந்துள்ளது. இந்த வழக்கு நேற்று நீதிபதி மணிமொழி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயச்சந்திரன், கோபிநாதன், சதானந்தம் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். பொன்முடி, கௌதமசிகாமணி, ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகியோர் ஆஜராகவில்லை. தொடர்ந்து, அரசு தரப்பில் 20 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், மேலும் கூடுதலாக 4 பேரை இவ்வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர். இதனைதொடர்ந்து வழக்கை நீதிபதி வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
The post பொன்முடி மீதான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.