வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: தென் கொரியாவின் புதிய அதிபர் லீ ஜே மியுங் அழைப்பு

தென் கொரியா: வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தென் கொரியாவின் புதிய அதிபர் லீ ஜே மியுங் அழைப்பு விடுத்துள்ளார். தென் கொரியாவின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி, நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானத்தை கொண்டுவந்தனர். இதையடுத்து அதிபர் யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதன்மூலம் கைது செய்யப்பட்ட முதல் தென் கொரிய அதிபராகவும் அவர் விளங்கினார். எனினும், இதுதொடர்பான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் இவ்வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த நீதிமன்றம், தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் (ஜூன் 3) அதிபர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மனித உரிமை வழக்கறிஞரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான லீ ஜே-மியுங்கும், மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் கிம் மூன்-சூவும் போட்டியிட்டனர். இதில் லீ ஜே-மியுங் 49.42 சதவீத வாக்குகளைப் பெற்று வடகொரியாவின் அடுத்த அதிபராகப் பதவியேற்க உள்ளார். வாக்கெடுப்புக்கு முன்னதாகவே கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் இருந்த லீ ஜே-மியுங், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளிலும் அவரே முன்னிலையில் இருந்து வெற்றி பெற்றார். பின்னர், தேர்தலில் வெற்றிபெற்ற பின்பு பேசிய அவர் வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் நாட்டை ஒன்றிணைக்க பாடுபடுவேன். மற்றொரு இராணுவ சதி அல்லது இராணுவச் சட்ட நெருக்கடி மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வேன் என உறுதி கூறினார்.

 

The post வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: தென் கொரியாவின் புதிய அதிபர் லீ ஜே மியுங் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: