சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் டெர்மினல் 1ல் செயல்பட்டு வருகிறது. டெர்மினல் 2ல் தற்போது விமான நிலைய விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. டெர்மினல் 3ல் சர்வதேச விமான நிலையம் வருகை பகுதியாகவும், டெர்மினல்-4 சர்வதேச புறப்பாடு பகுதியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதிகளில், விமான போக்குவரத்துக்கு இடையூறாக, பறக்கும் பறவைகளை விரட்டுவதற்கு, “தண்டர் பூம்ஸ்” என்ற இடி ஓசை ஒலி எழுப்பக்கூடிய, புதிய கருவிகள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை பட்டாசுகள் வெடித்து ஒலி எழுப்பி, பறவைகள் விரட்டப்பட்டு வந்தன. அதில் 100% பலன் எட்டாததால் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
The post சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் பறவைகளை விரட்ட ‘தண்டர் பூம்ஸ்’ புதிய கருவி!! appeared first on Dinakaran.