கூடலூர் : மழையின் தீவிரம் குறைந்ததை அடுத்து, தேக்கடி ஏரியில் சுற்றுலா படகு சவாரி மீண்டும் தொடங்கியது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு தினந்தோறும், பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். அவர்கள் இங்குள்ள ஏரியில், படகு சவாரி மூலம் வனப்பகுதியில் உள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கையை கண்டு ரசிப்பது வழக்கம்.
கடந்த மே 24ம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமானதை அடுத்து, இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. மே 27ம் தேதி வரை தேக்கடியில் படகு சவாரிக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் தொடர் ந்து ஏரி பகுதியில் மழை பெய்து வந்ததால் பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தேக்கடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழையின் தீவிரம் குறைந்ததை அடுத்து, நேற்று முன்தினம் முதல் மீண்டும் சுற்றுலா படகு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகள் தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசித்து வருகின்றனர்.
The post மழை குறைந்ததால் தேக்கடியில் மீண்டும் படகு சவாரி appeared first on Dinakaran.