கே.எம்.சி.ஹெச் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவை, ஜூன் 4: கோவை கே.எம்.சி.ஹெச். கீழ் கடந்த 2019ம் ஆண்டு கே.எம்.சி.ஹெச். இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் (KMCH IHSR) தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் 150 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், 2019-2025ம் ஆண்டு (முதல் பேட்ச்) எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான முதலாவது பட்டமளிப்பு விழா கடந்த மே 31ம் தேதி என்.ஜி.பி. கல்லூரி அரங்கில் நடந்தது. விழாவில் கேஎம்சிஹெச் மருத்துவ கல்லூரி டீன், மேஜர் ஜெனரல் ரவிக்குமார் வரவேற்புரையாற்றினார்.

சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதைத்தொடர்ந்து, கே.எம்.சி.ஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி தலைமையுரை ஆற்றினார். கே.எம்.சி.ஹெச் நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் என்.பழனிசாமி, கே.எம்.சி.ஹெச் துணைத்தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி ஆகியோர் பட்டதாரி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இறுதியாக மருத்துவ கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் நன்றி கூறினார்.

The post கே.எம்.சி.ஹெச் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: