அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, வெள்ளி திருட்டு

திருவள்ளூர், ஜூன் 3: திருவள்ளூர் அடுத்த ஈக்காடு மகாலட்சுமி நகர் பகுதியில் வசிப்பவர் சோமசேகரன். இவரது மனைவி ராதா. இவர்கள் இருவரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தங்களது சொந்த கிராமமான நாகலாபுரத்திற்குச் சென்றனர். இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் சோமசேகரன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 சவரன் நகைகள் மற்றும் 250 கிராம் வெள்ளி கொலுசு திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த திருட்டு குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் நிக்கி என்ற மோப்பநாய் உதவியுடன் திருடர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, வெள்ளி திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: