உற்சாகமாக வந்த மாணவர்கள் செம்மொழிநாள் விழா போட்டி வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்

அரியலூர் ஜூன் 3: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற செம்மொழிநாள் விழா 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் இரத்தினசாமி வழங்கினார்.தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3 ம் தேதி அன்று செம்மொழிநாள் விழாவாக 2025ம் ஆண்டு கொண்டாடப்பெறவுள்ளது. “தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் கலைஞர் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான ஜூன் திங்கள் 3ம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழிநாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

செம்மொழியின் சிறப்பையும் முத்தமிழறிஞரின் தமிழ்த்தொண்டின் பெருமையையும் மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி ஜூன் 3ம் நாளன்று நடைபெறவுள்ள செம்மொழிநாள் விழாவில் மாநில அளவில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர். மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். 11,12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் மாவட்டப் போட்டிகள் :அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் கடந்த மே 9 ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கட்டுரை போட்டியில் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி,12ஆம் வகுப்பு மோனிஷாமுதல் பரிசு ரூ.10ஆயிரம்,கரு.பொய்யூர்அரசு மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு, மாணவி பாவனா இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், கீழப்பழுவூர் அரியலூர் மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு மாணவர் சதீஷ் .மூன்றாம் பரிசு ரூ.5, ஆயிரம், பேச்சுப்போட்டியில் முதல் பரிசு ரூ.10, ஆயிரம், வே.அகிலன், 12ம் வகுப்பு, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, செந்துறை. இரண்டாம் பரிசு ரூ.7,000 வினோதாராணி, 12ம் வகுப்பு, பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம். மூன்றாம் பரிசு ரூ.5,000 சரிகா , 11ம் வகுப்பு, அரசு மேல்நிலைப்பள்ளி, காமரசவல்லி ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

கல்லூரி மாணவர்களுக்கான மாவட்டப் போட்டிகள் : அரியலூர் மாவட்டத்தில் கட்டுரை போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 அன்னபூரணி, முதுகலைத் தமிழ், இரண்டாம் ஆண்டு, அரசு கலைக் கல்லூரி, அரியலூர். இரண்டாம் பரிசு ரூ.7,000 .பாரதி கண்ணன், இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,யங்கொண்டம். மூன்றாம் பரிசு ரூ.5,000 மணிமேகலா, இளநிலை கணினி செயல்பாட்டியல், முதலாம் ஆண்டு, மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கீழப்பழுவூர். பேச்சுப்போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 வீ.தனலெட்சுமி, இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ெஜயங்கொண்டம். இரண்டாம் பரிசு ரூ.7,000 க.சுபலெட்சுமி, இளங்கலைத் தமிழ், முதலாம் ஆண்டு, அரசு கலைக் கல்லூரி, அரியலூர். மூன்றாம் பரிசு ரூ.5,000 வை.வைஜெயந்தி, முதுகலை கணினி பயன்பாட்டியல், முதலாம் ஆண்டு, மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி, தத்தனூர் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் இரத்தினசாமி, வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் க.சித்ரா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ.சுருளிபிரபு, அரியலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அ.குனசேகரன் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post உற்சாகமாக வந்த மாணவர்கள் செம்மொழிநாள் விழா போட்டி வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய கலெக்டர் appeared first on Dinakaran.

Related Stories: