பெ.நா.பாளையம், ஜூன் 3: கோவில்மேடு பகுதியில் வீட்டில் விபச்சாரம் நடப்பதாக கவுண்டம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்குள்ள மஞ்சேஸ்வரி காலனி முதல் வீதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜ்குமார் மனைவி சத்தியா (37) நல்லாம்பாளையம் பூபதி மனைவி மகாலட்சுமி (38) மதுக்கரை மரப்பாலம் பிரமோத் மனைவி சிவரஞ்சனி (23), சாய்பாபா காலனியை சேர்ந்த விஜயகுமார் மனைவி தீபதர்ஷினி (20), புரோக்கர்கள் மஞ்சேஸ்வரி காலனி கண்ணன் மகன் ரஞ்ஜித் குமார் (35) ரத்தினபுரி வேலுமணி மகன் கோபிநாத் (29), அண்ணப்ப நகர் புது தோட்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் ராகேஸ் (20) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post சொந்த வீட்டில் விபசாரம் நடத்திய 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது appeared first on Dinakaran.