கறம்பக்குடி அருகே மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

கறம்பக்குடி, ஜூன் 3: கறம்பக்குடி அருகே மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள அக்னி ஆற்றில் மணல் அள்ளுவதாக கறம்பக்குடி காவல் துறைக்கு அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த எஸ்ஐ மாதேஸ்வரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற இரண்டு மாட்டு வண்டிகளை மடக்கி விசாரித்தனர். அதில், அரங்குளம் மஞ்சுவயல் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம், துரைராஜ் ஆகிய இருவரும் மாட்டு வண்டியில் மணல் கடத்தியது தெரியவந்தது. அதையடுத்து, அவர்களிடம் இருந்து 2 மாட்டு வண்டிகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து, இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

The post கறம்பக்குடி அருகே மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: