கெடார் அருகே முன்விரோத தகராறில் அண்ணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பி கைது

 

கண்டாச்சிபுரம், ஜூன் 3: விழுப்புரம் மாவட்டம் கெடார் அடுத்த வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மூத்த மகன் விஜயபாலன்(40). இவரது தம்பி வடிவேல் (36) சகோதரர்கள் இருவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் உண்டான பொது இடத்தில் தம்பி வடிவேல் பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வைத்துள்ளதற்கு விஜயபாலன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது வடிவேல் அவரது அண்ணன் விஜயபாலனை அசிங்கமாக திட்டி தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் விஜயபாலனுக்கு தலை, வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விஜயபாலன் கொடுத்த புகாரின் பேரில் கெடார் உதவி ஆய்வாளர் விஜியகுமார் வழக்குப்பதிந்து வடிவேலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கெடார் அருகே முன்விரோத தகராறில் அண்ணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பி கைது appeared first on Dinakaran.

Related Stories: