கோவை: பதஞ்சலி நிறுவனத்தின் தலைவரும், பிரபல யோகா குருவுமான பாபா ராம்தேவ், நேற்று முன்தினம் மதியம் தனி விமானம் மூலம் கோவைக்கு வந்தார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், இரவு 8 மணியளவில் கோவை விமான நிலையம் வந்து தனி விமானத்தில் மும்பை புறப்பட்டார். ஆனால், வானில் பறந்த சிறிது நேரத்திலேயே விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானி அவசரமாக மீண்டும் கோவை விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார். இதையடுத்து பாபா ராம்தேவ், மும்பை சென்ற பயணிகள் விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
The post பாபா ராம்தேவ் சென்ற தனி விமானத்தில் திடீர் கோளாறு அவசரமாக தரை இறங்கியது appeared first on Dinakaran.