கட்சிக்கு பலன் ஏற்பட்டால் பீகார் பேரவை தேர்தலில் போட்டி: ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் உறுதி

ராய்ப்பூர்: கட்சிக்கு பலன் கிடைத்தால் பீகார் சட்ட பேரவை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் கூறினார். ஒன்றிய அமைச்சரும் லோக்ஜனசக்தி(ஆர்வி) கட்சி தலைவருமான சிராக் பஸ்வான் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது வரும் பீகார் பேரவை தேர்தலில் போட்டியிடுவீர்களா என அவரிடம் நிருபர்கள் கேட்டனர்.அதற்கு பதிலளித்த சிராக் பஸ்வான்,‘‘ விரைவில் பீகார் அரசியலுக்கு திரும்ப விரும்புகிறேன்.

தேசியத் தலைவர்கள் மாநிலத் தேர்தல்களில் போட்டியிட்டபோது பல கட்சிகள் பயனடைந்துள்ளன.சட்டமன்றத் தேர்தல்களில் எம்பி.க்களை நிறுத்தி அதன் பலனை பாஜ பெற்றுள்ளது. கட்சிக்கு பலன் ஏற்பட்டால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.மக்களவை தேர்தலில் கட்சிக்கு 100 % வெற்றி கிடைத்தது’’ என்றார்.

The post கட்சிக்கு பலன் ஏற்பட்டால் பீகார் பேரவை தேர்தலில் போட்டி: ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: