விஜயபுரா: கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் பசனவன்பாகேவாடி தாலுகாவில் உள்ள மனகுளி நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட கனரா வங்கியில் கொள்ளை நடந்தது. வங்கியில் திருட்டு நடந்ததாக தகவல் கிடைத்ததும், மனகுளி போலீசார், நாய் படை மற்றும் கைரேகை குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 58 கிலோ 976 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.5.20 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. தங்கத்தின் மதிப்பு ரூ.53.26 கோடி ஆகும். எஸ்பி லட்சுமணன் நிம்பராகி கூறுகையில், ”வங்கி கொள்ளையில் 6 முதல் 8 பேர் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
The post கர்நாடக மாநிலத்தில் வங்கியில் 58 கிலோ தங்கநகை கொள்ளை appeared first on Dinakaran.