இரண்டாவது கட்டமாக அயோத்தி ராமர் கோயிலில் இன்றுமுதல் கும்பாபிஷேகம்


அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கடந்த ஆண்டு ஜனவரி 22 அன்று நடைபெற்றது. இது பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. தற்போது 2ஆம் கட்ட கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது. இதற்காக நேற்று சரயு நதிக்கரையில் இருந்து ஒரு பிரமாண்டமான புனித ஊர்வலம் நடந்தது.இந்த கும்பாபிஷேக பணியின் போது கோயிலின் முதல் மாடியில் உள்ள ராமர் தர்பாரிலும், வளாகச் சுவர்களுக்குள் உள்ள ஆறு கோயில்களிலும் சிலைகளை பிரதிஷ்டை செய்வது அடங்கும். முக்கிய சடங்குகள் ஜூன் 5 ஆம் தேதி கங்கா தசரா பண்டிகையுடன் இணைந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் காலை 6.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பூஜைகள் நடைபெறும். ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமான் சிலைகள் மற்றும் ஆறு கோயில்களின் பிரதான பிரதிஷ்டை ஜூன் 5 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post இரண்டாவது கட்டமாக அயோத்தி ராமர் கோயிலில் இன்றுமுதல் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: