2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் எடுத்தது, ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மிகச்சிறந்த இன்னிங்ஸாகக் கருதப்படுகிறது. அதைத் தவிர, அவர் மூன்று சதங்களையும் 23 அரைசதங்களையும் அடித்துள்ளார். பந்துவீச்சில் 4 முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு சிறந்த ஃபீல்டராக, 91 கேட்சுகளையும் பிடித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள 2026 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு மேக்ஸ்வெல் இந்த முடிவை எடுத்ததாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பிக் பாஷ் லீக் மற்றும் பிற சர்வதேச டி20 போட்டிகளில் கவனம் செலுத்த மேக்ஸ்வெல்லின் நோக்கத்தையும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
The post சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் கிளென் மேக்ஸ்வெல் appeared first on Dinakaran.