காஞ்சிபுரம்: படப்பையில் திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் படப்பையில் ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான படப்பை ஆ.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், மத்திய ஒன்றிய பொறுப்பாளர் மணி, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், கருணாநிதியின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு, ரூ.5 லட்சம் செலவில் நிர்வாகிகள் மற்றும் கிளை செயலாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் நிதி வழங்கப்பட்டது.
The post படப்பையில் திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.