இந்நிலையில், தனிப்படையில் இருந்த மேட்டுப்பாளையம் எஸ்ஐ மகாராஜா, எஸ்ஐ நவநீதகிருஷ்ணனிடம் இருந்து கையாடல் பணம் ரூ.50 ஆயிரத்தை கமிஷனாக பெற்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை கோவை டிஐஜி சசிமோகன் சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். வேலியே பயிரை மேய்ந்ததுபோல கைதானவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை கையாடல் செய்ததாக ஒரு எஸ்ஐ கைதானதும், அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் கமிஷன் பெற்றதாக மற்றொரு எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post கொலை வழக்கில் கைதானவர்களிடம் 18 பவுன் சுருட்டிய வழக்கில் மேலும் ஒரு எஸ்ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.