உயிர்போகிற வரைக்கும் சரியாக வாழ்த்துவிட்டு போனார் என பிறர் மனசாட்சி சொல்லட்டும். என் மீது அவதூறு பரப்புபவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் வாழ்த்துகள். நான் கட்சிக்கும், ராமதாசுக்கும், அன்புமணிக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். கட்சிக்காகவும், மக்கள் பிரச்னைக்காகவும் உழைத்தவன் நான். ஆனால், என்னை பற்றி அவதூறான கருத்துக்களை சிலர் பரப்பி வருகிறார்கள். எங்களுடைய பொறுப்பாளர்கள், சாதாரண கட்சி தொண்டர்கள் விருப்பம், சீக்கிரம் இருவரும் சந்திக்க வேண்டும்.
இருவரும் சந்தித்து பேசினால் அய்யா மீண்டும் வீறு கொண்டு எழுவார். இது சோதனைக்காலம்தான். இதனை மீறி இருவரும் இணைந்து செயல்பட்டால் கட்சி அபார வளர்ச்சி பெறும். காலச்சூழலோ, என்ன காரணமோ தெரியவில்லை, மிகப்பெரும் நெருக்கடியான நிலை. இதனை சரிசெய்யவே நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். ஜி.கே.மணி என்ற ஆழமான உள்ளம் கொண்ட மனிதனின் எண்ணம், விருப்பம் ராமதாஸ், அன்புமணி மீண்டும் சந்திக்க வேண்டும்.
அதுதான் எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி, எங்களது ஒவ்வொரு பொறுப்பாளரும் தொண்டர்களின் ஆசையும்கூட. நேரிலும், தொலைபேசியிலும் சமாதானம் பேசிக்கொண்டே இருக்கிறேன். உட்கட்சி பிரச்னை அனைத்தையும் வெளியே சொல்வது நன்றாக இருக்காது. ஊடகத்தில், ஒரு சில ஏடுகளில் என்னைப்பற்றி அவதூறாக செய்தி வருகிறது. இது நல்லதல்ல.
ஏன் இப்படி மனசாட்சிக்கு விரோதமாக எழுதுகிறார்கள் என தெரியவில்லை. இதனை அறையில் உட்கார்ந்து பார்த்தபோது நான் கண்ணீர் வடித்தேன்.எப்படி இப்படி மனசு வருது. இப்படி அவமானப்படுத்தி, கொச்சைப்படுத்தி எழுதுவதுதான் சந்தோஷம் என்றால் எழுதட்டும். அவர்களுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும். நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். ஒன்று நான் யார் தொடர்பிலும் இல்லாமல் ஊரை விட்டே சென்று விட வேண்டும், அல்லது உயிரை துறப்பது. இது தான் வழி என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
The post பாமகவை உடைக்க நான் காரணமா? ஊரை விட்டே ஓடணும்… இல்லேன்னா சாகணும்…ஜி.கே.மணி கடும் விரக்தி appeared first on Dinakaran.