புழல், மே 30: மாதவரம் மண்டலம் 32வது வார்டு புழல் அடுத்த புத்தகரம் கடப்பா சாலையில், சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் சார்பில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் பரப்பான்குளம் சீரமைப்பு மற்றும் பூங்கா அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. குளம் மற்றும் பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இதற்கான விழாவில் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, 32வது வார்டு கவுன்சிலர் ஏழுமலை, உதவி பொறியாளர் தினேஷ் ராவ் ஆகியோர் குளம் மற்றும் பூங்காவை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாதவரம் மண்டல அலுவலர்கள், ஊழியர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post ரூ.1.40 கோடியில் குளம், பூங்கா திறப்பு appeared first on Dinakaran.