அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கும் தங்கம் விலை; ஒரு பவுன் மீண்டும் ரூ.71 ஆயிரத்தை தாண்டியது: ஒரே நாளில் ரூ.1760 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று மீண்டும் பவுனுக்கு ரூ.1760 அதிரடியாக உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.71,440க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்க கருதி இருந்தவர்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்தனர். சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்றபடி, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது. இம்மாதம் மே 15ம் தேதி ஒரு பவுன் ரூ.68,660-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது.

அதன்படி, கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,930-க்கும், பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் தங்கம் வாங்க நினைத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கம் விலை உயர்வு குறித்து வியாபார சங்கத்தினர் கூறுகையில், ‘‘உலக அளவில் உள்ள மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கிக் குவித்து வருவதால், தங்கத்தின் விலை உச்சத்தை எட்டி வருகிறது என்றனர்.

The post அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கும் தங்கம் விலை; ஒரு பவுன் மீண்டும் ரூ.71 ஆயிரத்தை தாண்டியது: ஒரே நாளில் ரூ.1760 உயர்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: