பரமக்குடி: பிரதமர் நரேந்திர மோடி, 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட்டார். ஆனால், தற்போது இப்பிரிவினருக்கு தமிழக பாஜவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை; தங்களுக்கு பதவி வழங்காமல் சிலர் தடுப்பதாக கூறி, மாநில பாஜவிற்கு நேரடியாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனால் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாஜவிற்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. போஸ்டரில், ‘‘ராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு மற்றும் முக்கிய பொறுப்புகளில் தேவேந்திரகுல வேளாளர் மக்களை சேர விடாமல் தடுப்பது யார்?, யார் அந்த சார்?, தவறை திருத்தி கொள்ளுமா?’’ என கூறப்பட்டுள்ளது. தாமரை சின்னத்தின் மேல் 2026 கேள்விக்குறி என்ற படமும் அந்த சுவரொட்டியில் இடம் பெற்றுள்ளது.
The post யார் அந்த சார்? பாஜவுக்கு எதிராக கண்டன போஸ்டர் appeared first on Dinakaran.