இந்த நிலையில் வாரத் தொடக்க நாளான நேற்று முன்தினம் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது.
அன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,755க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு பவுன் ரூ.70,040க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று யாரும் எதிர்ப்பாராத வகையில் தங்கம் விலை சரிவை சந்தித்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.8,710க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ஒரு பவுன் ரூ.69,680க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ. 108க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 குறைந்து ரூ.1,08,000க்கும் விற்பனையானது.
The post தங்கம் விலையில் மாற்றம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 குறைந்தது appeared first on Dinakaran.